பொது
தீபக் சோப்ரா
ISBN கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
நம்முடைய இருப்பின் ரகசியத்தையும் ஆனந்தம் என்பதை அடைய நமக்குள் உள்ள தீராத தாகத்துக்கு நமது இருப்பின் பங்களிப்பினையும் இந்த நூலில் ஆசிரியர் கையாண்டுள்ளார். நான் யார்? எங்கிருந்து நான் வந்துள்ளேன்? நான் மரணிக்கும்போது எங்கு போகிறேன்? இக்கேள்விகளுக்கெல்லாம் விடை தர, வேதாந்த தத்துவங்கள் மற்றும் நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகள் ஆகிய இரண்டையுமே துணைக்கழைத்துக் கொள்கிறார் ஆசிரியர். மாசு மருவற்ற முழு அறிதல் எனும் நம்முடைய நிஜ இயல்பினை அறிந்து உணர, இப்புத்தகத்தில் ஆழமான வழிவகைள் தந்துள்ளார். முழு அறிதல் எனும் நமது நிஜ சுபாவத்தினை நாம் அறிந்து கொண்டதும், பொருள் சார்ந்து நாமடையும் சந்தோஷத்தையெல்லாம் கடந்து, ஒரு ஆனந்தமான ஆத்ம ஆனந்தத்தினை அனுபவித்து வாழத் துவங்குகின்றோம். இவ்வகையில் நாம் யார்? என்று நாம் அறிந்து கொண்டதும், பிரபஞ்ச சக்தியுடன் இடைமறிப்பதை நிறுத்திக் கொள்கிறோம்... அந்த மாபெரும் அண்ட சராசர சக்தியையே நம்முள் புகுத்தி விட்டு, எவ்வித மெனக்கெடலுமின்றி, நம் வாழ்க்கை நெடுகிலும் சக்தியும், ஆன்மவிடுதயும், கருணைக் கடலும் பொங்கிக் கொண்டே இருக்கும்படி செய்துவிடுகின்றோம்.