முகப்பு » வர்த்தகம் » பங்குச் சந்தையில்

பங்குச் சந்தையில் லாபம்

ஆசிரியர் : டி.எஸ்.ஜயராம்

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்: 978-81-8402-237-7

Rating

பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் சிறு முதலீட்டாளர்களின் பங்குக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் போதிய அளவில் கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இந்தப் புத்தகம் சிறு முதலீட்டாளர்களின் பிரச்னைகளை வெளிச்சம்போட்டுக் காட்டி அவர்களின் தேவைக்காகவே எழுதப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் லட்சக்கணக்கான மக்கள் பல கோடி ரூபாயை இழக்கின்றனர். இதற்குக் காரணம் அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். பங்குச் சந்தை என்பது கட்டுக்கடங்காத ஒரு ராட்சதப் பணப்பசி கொண்ட நடவடிக்கை. ஒரு கணத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இங்கு மாயமாக மறையக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் சிறு முதலீட்டாளர் அறிவுபூர்வமாக இங்கு இயங்கினால் பங்குச் சந்தையை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். ஏனென்றால் பங்குச் சந்தைகள், சிறு முதலீட்டாளர்களின் ஆதரவிலேயே இயங்குகிறது. இருப்பினும் சிறு முதலீட்டாளர்கள் தங்களது உண்மையான பலத்தை அறியவில்லை. பல வருடங்களாக, வியாபார செய்திகள், வார இதழ்கள் மற்றும் பல புத்தகங்களிலிருந்தும் சேர்க்கப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பல நிபுணர்களின் அனுபவமும், அறிவாற்றலும் இந்த புத்தகத்தின் பக்கங்களில் மறைந்திருக்கின்றன. ஒரு சராசரி வாசகருக்கு வேண்டாதவற்றைக் களைந்து, ஒரு எளிமையான தமிழ் நடையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us