எல்.கே.எம்., பப்ளிகேஷன் 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை600 017. (பக்கம்: 80).
மன வளர்ச்சி குன்றியும், உடல் உறுப்புகள் சரியான வளர்ச்சி இல்லாதும், பெற்றோர் மற்றோரால் ஒதுக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகள் என்று அழைத்தும், இறைவனின் குழந்தைகள் என்று கூறியும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று முழுமையாக அறியாத குழந்தைகளைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் அருமையான கவிதை நூலை இந்நூலாசிரியர் தந்துள்ளார்.
இரக்கம் என்பதை ஒரு சிறிதும் அறியாதோர் கூட, இந்நூல் படித்தால், இக்குழந்தைகள் மீது இரக்கம், அன்பு, உதவும் பண்பு பெறுவர்.
சென்னை, அடையாறு, ஆந்திர மகிள சபாவில் உள்ள இக்குழந்தைகளுக்குச் சேவை செய்யும் இந்நூலசிரியரின் ஆதங்கம், நாட்டில் உள்ள பல குழந்தைகளுக்கும் சேர்த்து தான்.