முகப்பு » பொது » தமிழக மண் உருவங்கள்

தமிழக மண் உருவங்கள்

விலைரூ.12000

ஆசிரியர் : சண்முகம்

வெளியீடு: சேகர் பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை78.
தமிழகக் கலை வரலாற்றிற்கும், தொல்லியலுக்கும் புதிய வரவு இந்நூல். மண்ணால் செய்யப் பட்டுச் சூரிய வெப்பத்தால் உலரவைத்தோ, தீயில் சுட்டெடுத்தோ உருவாக்கப்பட்ட மண் உருவங்கள் பற்றி, மனித வாழ்வு தொடங்கிய காலம் முதல் தற்காலம் வரை, ஒரு தொடர் வரலாற்றை இந்நூல் தருகிறது.
பண்டைய உலக நாகரிகங்கள், இந்தியா, தென் இந்தியா என்று படிப்படியாகச் செய்தி
களைக் கூறுவது தமிழக மண் உருவங்களைப் பற்றி அறிவதற்கான முன்னோட்டமாக உள்ளது.
தமிழக அகழாய்வுகளிலும், கள ஆய்வுகளிலும் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் உருவங்களின் விவரங்கள் பாமரருக்கும் புரியும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளது.
சிற்பம், ஓவியம், செப்புத்திருமேனி ஆகியவற்றை வடித்திடும் நெறிமுறைகளையும், தொழில்நுட்பங்களையும் அறிந்திடத் தொன்மையான நூல்கள் இருந்தபோதும் மக்கட் கலையான மண் உருவங்களுக்கான தொழில்நுட்பங் களை அறிய நூல்கள், தரவுகள் ஏதும் கிடைக்காத நிலையில்,
அகழாய்வுகளில் கண்டெடுக்கப் பட்ட மண் உருவங்களைக் காலமுறைப்படுத்தி, அவை செய்வதற்கான தொழில் நுட்ப நிலைகளை முன் வைப்பது இந்
நூலின் சிறப்பான தன்மையாகும்.
இவர் பயன்
படுத்தும் ஒட்டுதல், கிள்ளல், பதித்தல், செயல் நேர்த்தி போன்ற சொல்லாட்சிகள் நுண்கலைகளின் தொழில்நுட்ப வளர்ச்சி வரலாற்றைத் தமிழில் தரமுடியும் என்பதற்கு சான்றுகளாகும்.
நூலில் 40 பக்கங்களில் 195 படங்கள் தரப்பட்டுள்ளமையும் அவற்றில் சரிபாதி தமிழகம் சார்ந்தவை என்பதும் சிறப்பானதாகும்.
தொல்லியல் சார்ந்த அரசு, பல்கலை மற்றும் ஏனைய நிறுவனங்கள் தாங்கள் கண்டறிந்த மண் உருவங்களின் படங்களை முழுமையாக இன்னும் வெளியிடவில்லை என ஆசிரியர் தனது ஆய்வுக்களத் தடங்கல்களைச் சுட்டுகிறார்.
ஒருவேளை அவை வெளியிடப்பட்டிருந்தால், இவ்வாய்வு 10, 20 ஆண்டு ஊக்குவிக்கப்பட்டு விரிவடைந்து, இன்று சர்வதேசத் தரத்தை எட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
காலவரிசையில் மண் உருவ வகைகளையும் அவற்றின் பொதுக்கூறுகளையும் வரிசைப் படுத்திச் சொல்லும் போது ஓரே மாதிரியான சிறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளன.
எனினும் தனித்தனிக் காலவரிசையில் செய்தி அறிய முற்படுவோருக்கு இவை பெரிதும் பயன் தரும்.
ஆங்கிலேயர் காலத்தியக் கட்டங்களான மாநிலக் கல்லூரி, சென்னைப் பல்
கலைக்கழகம், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் சுட்ட தாமரை வடிவ மண் தட்டுகள் அலங்காரப் பொருள்களாக உள்ளதை
ஆசிரியர் குறிப்பிடுவது ஆய்வாளர்களுக்கு இருக்க வேண்டிய கூர்ந்து நோக்கும் பண்பை வெளிக்காட்டுகிறது.
தமிழகத்தில் கிடைத்த விளையாட்டுப் பொருள்
களைக் குறிப்பிடும் போது
ஆசிரியர் ஆட்டக்காய்களைக் குறிப்பிட்டு சங்க இலக்கியங்களில் காணப்படும் வல்லு, வட்டு, கவறு குறித்த ஒரு சிறு ஆய்வையே நிகழ்த்தியிருக்கின்றனர்.
கள ஆய்வு, அகழாய்வு, நூலாய்வு, பட்டறிவு ஆகியவற்றின் கூட்டுச் சாதனயாக இந்நூல் அமைந்துள்ளது. ஊர்தோறும் கேட்பாரற்றுக் கிடந்த கிடைத்து வரும்
மண் உருவங்கள் பற்றி ஒரு விழிப்புணர்வை இந்நூல் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us