குமுதம் புத்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை10. (பக்கம்: 128).
"மண்ணும் இமயமலை எங்கள் மலையே என்று நாம் பாடி மகிழ்ந்திடும் "மலை தேசம் நேபாளம் என்னும் தனி நாடாக இந்தியாவின் தோள்பட்டை போல் இயங்குகிறது. இயற்கையின் அழகொளிரும் இத்திருநாடு, "இந்து சமய நாடு எனப் பிரகடனம் செய்துள்ள ஒரே நாடாகும்.
இந்நாட்டின் ஆண் மக்கள் பலரும், நம் நாட்டில் "காவல் தொழில் மேற்கொண்டுள்ளனர்; அவர்களை நாம் "கூர்க்கா என்று அழைக்கிறோம். நேபாள நாட்டைப் போலவே அங்கு வாழும் பெண்களும் மிக அழகாகத் தோன்றுகின்றனர்.
தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் (சிவன்) கோவிலும், "போக்ரா எனும் ஊரிலிருந்து ஹெலிகாப்டரில் சென்று தரிசிக்கக் கூடிய முக்திநாத் (பெருமாள்) கோவிலும், இந்நாட்டின் முக்கியத் தெய்வத் திருத்தலங்கள்.
முக்திநாத்தில் நிரம்பக் கிடைக்கக்கூடிய "சாளக்கிராமமும் (மாலாகக் கருதப்படும் கல்) பசுபதிநாத்தில் நிரம்பக் கிடைக்கும். உத்திராக்கமும் அங்கிருந்து வாங்கி வரத்தக்கவை.
படிக்கத் தூண்டும் வகையில் நூலாசிரியர் பக்தியைக் குழைத்துத் தமிழை இழைத்து, அருமையாகப் படைத்துள்ளார் இந்நூலை. புத்தகம் முழுவதும் பற்பல படங்கள்; நேரில் பார்க்க முடியாத வரும் பார்த்தது போல் உணரத்தக்க வகையில் அமைந்துள்ளன. ஒரு புனிதப் பயணம் சென்று வந்த நிறைவு, நூலைப் படித்தால் உண்டாகும்.