ஆதித்யா பதிப்பகம், எப்2, அஞ்சநாத்ரி பிளாக் 2, 18, விஸ்வநாதபுரம் முதல் தெரு, கோடம்பாக்கம், சென்னை24. (பக்கம்: 272).
விஜயபாரதம் என்ற இதழில் வந்துள்ள தனது ஆன்மிகக் கேள்வி பதில்களைத் தொகுத்து, புத்தகமாய் தந்துள்ளார் . சநாதன தர்மம், பாரதப் பண்பாடு, சமய நம்பிக்கை, கோட்பாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றிய அடிப்படை விளக்கங்களை, கேள்வி பதில் வழியாய் தரப்பட்டிருக்கின்றன.
ஒன்பது பகுதிகள் கடவுள், உருவ வழிபாடு, ஆகமங்கள், கோவில், வழிபாடு, பூஜை, ஜபம், தியானம், வேதங்கள், சித்தாந்தங்கள், இந்து மதம், பிற மதங்கள், பஞ்சாங்கம், ஜோதிடம், சித்த வைத்தியம், இதிகாசங்கள், திருமடங்கள் என நூற்றுக்கணக்கான செய்திகளை விளக்கிக் கூறுகிறது இந்நூல். ஆன்மிகத் தேடலுக்கு நல்ல விருந்தாய், மானுடத்தை உய்விக்க ஓர் ஊன்று கோலாய் இருக்கிறது இந்நூல்.