விஜயா பப்ளிகேஷன்ஸ், 15, பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத் தாங்கல், சென்னை600 032. (விலை: ரூ.100).
தென்னிந்தியாவின் மாபெரும் தயாரிப்பாளராகத் திகழ்ந்தவர் நாகி ரெட்டி. இந்தப் புத்தகம் வெறும் 144 பக்கங்கள் தான்.
ஐம்பது ஆண்டுகளுக்குக்கும் மேலாகத் திரை உலகத்துடன் தம்மை ஐக்கியப்
படுத்திக் கொண்ட பெரியவர் இத்தனை சின்ன நூலுக்கு உரியவர் அல்ல!
ஆனால், இந்தச் சிறிய புத்தகமும், சுவையாகத் தான் இருக்
கிறது!
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, எழுத்தாளர் சக்ரபாணியுடன் இணைந்து, "ஆந்திர ஜோதி என்னும் சமூக, இலக்கிய, அரசியல் விழிப்புணர்வு தெலுங்கு மாத இதழையும் (1945) குழந்தைகளுக்கான மாத இதழ் சந்த மாமாவையும் (1947), தொடங்கி அதை 12 இந்திய மொழிகளில் வெளியிட்டார். 50க்கும் மேற்பட்ட படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் தயாரித்தவர்.
சினிமா இலக்கியப் பொக்கிஷம்!