புத்தகப் பூங்கா, 17/9, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை, சென்னை600 014. (பக்கம்: 196. விலை: ரூ.100).
கவி இசை வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பவர் கண்ணதாசன். கவிஞருடன் பிரியாமல் நாள்தோறும் சந்தித்து அவருடன் பழகிய இராம. முத்தையா கவிஞரின் பல பரிமாணங்களை அறிமுகப்படுத்துகிறார். பல சுவையான சம்பவங்களைச் சொல்லிச் செல்கிறார்.
கவிஞரின் முக்கியமான நண்பர்களில் ஒருவர் பிரபல வழக்கறிஞர் வி.பி.ராமன். அவருடைய வீட்டுக்கு வழக்கு சம்பந்தமாக கவிஞர் செல்வது வழக்கம். ஒரு நாள் காலையில், ராமன் வீட்டிற்குக் கவிஞர் சென்று, வீட்டு "காலிங் பெல்லை அழுத்தினார். உள்ளே இருந்து ராமனின் மனைவி கற்பகத்தம்மாள் ""ஹூ ஆர் யு? என்று குரல் கொடுத்தார். உடனே கவிஞர் சொன்ன ஆங்கில வார்த்தைகள்,""அவுட் ஸ்டாண்டிங் பொயட் இஸ் ஸ்டாண்டிங் அவுட்.