தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், 9ஏ, மேக்மில்லன் காலனி, நங்கநல்லூர், சென்னை600 061. (பக்கம்: 176).
பாடத் திட்டம், ஆசிரியர் பயிற்சி, பள்ளிக்கூட வசதிகள் (கூரை, சிமென்ட், மாடி) ஆசிரியர், மாணவர் விகிதம் அனைத்தும் சமமான, சீரான தரமான முறையில் இருப்பதே சமச்சீர் கல்வி முறையாகும். ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி, மத இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றாகக் கற்கக்கூடிய சமச்சீர் கல்வி முறையை 1964ம் ஆண்டிலேயே கோத்தாரி கல்விக் குழு வலியுறுத்தி இருக்கிறது.
அதன் பின் பல கல்விக் குழுக்களின் பரிந்துரைகள் ஏட்டளவிலேயே சீந்தூவார் அற்றுக் கிடந்தன. அந்தப் பரிந்துரைகளுக்கு இப்போதுதான் விடிவு காலம் பிறந்துள்ளது. சமச்சீர் கல்வி முறையை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, பல நிபுணர்கள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மிகப் பயனுள்ள தொகுப்பு.