செல்லம்மாள் பதிப்பகம், 167, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 204).
இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தில் ஒப்பற்ற இரு கவிஞர்கள், "பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியாரும், "தமிழுக்கும் அமுதென்று பேர்... அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! என்று தமிழ் இன்பத்தை நம் இதயத்தில் வார்த்த பாரதிதாசனும் ஆவர். முன்னவர் தணியாத சுதந்திர தாகத்தில் ஏங்கித் தவித்த, தேசியவாதி, இந்த நூலின் நாயகரான பின்னவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் "புரட்சிக்கவிஞர் எனப் புகழாரம் சூட்டப்பட்டவர்.
பத்திரிகையாளர், கவிஞருமான இந்நூலாசிரியர், புதுவையில் பாவேந்தரிடம் மூன்று ஆண்டுகள் குருகுலவாசமிருந்து, தமிழ் இலக்கண இலக்கியம் பயின்றதுடன், கவிஞரின் "குயில் இதழுக்குப் பெரும் பங்காற்றியவர் என்ற முறையில் பாவேந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்களிடம் எல்லாம் நெருங்கிப் பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றவர்.
எனவே, கவிஞர் பற்றிய நெஞ்சில் நிறுத்தக்கூடியதும், நெஞ்சை நெகிழ வைத்திடும் ஏராளமான தகவல்களை நூலெங்கிலுமாக அள்ளித் தெளித்துள்ளார்!