06. நூலாசிரியர்: சுவாமி ஆசுதோஷானந்தர். வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை4. (பக்கம்: 142)
மேற்கு வங்கம் பேலூர் மடம். இத்தகைய பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள திருத்தலம்: சுவாமி விவேகானந்தரால், ஒரு நூற்றாண்டுக்கும் முன்னர் நிறுவப்பட்டது; புண்ணிய கங்கை நதிக் கரையில், அழகிய கோவில்களை உள்ளடக்கியது.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னைஸ்ரீ சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தரின் பொற்பாதத் துகள்களால் புனிதமாக்கப்பட்டது. மேலும், புனித யாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை புரிந்து மன அமைதியும், ஆன்மிக நிறைவும் பெற்றுச் செல்கின்றனர்.
இத்திருத்தலம் குறித்த அரிய செய்திகள், அமைந்துள்ள கோவில்கள், அவற்றின் அருமை பெருமைகள், கருப்பு வெள்ளை நிழற்படங்கள், வழித் தடங்கள் யாவும் ஒருங்கிணைக்கப்பட்டு உற்றதோர் வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது.
ஏற்கனவே பார்த்துப் பரவசம் அடைந்தவர்களுக்கு, பசுமை நினைவுகளால் ஆனந்தம் பொங்கும்!