கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை18. (பக்கம்: 183).
செய்தியாளரான ஆர்.முத்துக்குமார், இந்த நூலில் எல்.கே.அத்வானியை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அகில இந்திய அளவில் மிகப் பெரிய அரசியல் கட்சியின் மிகப் பெரிய தலைவரான அத்வானியின் பன்முகப் பரிமாணங்களை நன்கு தொகுத்து வழங்கியிருக்கிறார்.
அத்வானியின் ரத யாத்திரை அரசியலை, சர்ச்சைக்குள்ளான பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிரச்னையையும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் ஆசிரியர் இந்த நூலில் கையாண்டிருக்கிறார். அத்வானி என்ற மனிதரை, அரசியல் தலைவரை, நனிமிகு நாகரிக நடையில் எழுதியுள்ளார். அத்வானியை தமிழன்பர்கள் நன்கு புரிந்து கொள்ள இந்த நூல் பெரிய அளவில் துணை புரியும்.