விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
பல்வேறு மகான்கள் மற்றும் அறிஞர்களின் அனுபவங்களை, சுவாரஸ்யமான நிகழ்வுகளை, பயனுள்ள போதனைகளை இந்த நூலில் எளிய நடையில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் முனைவர் எஸ்.சந்திரா.
மகான்களாகப் போற்றப்படும் ஆன்மிகச் சிந்தனையாளர்களான ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், ரமணர் முதல், அறிவியலாளர்களான சர்.சி.வி.ராமன், பியாரி க்யூரி வரை...
சாக்ரடீஸ் போன்ற தத்துவஞானிகளின் வாழ்க்கை முதல், தங்கள் வாழ்க்கையையே தத்துவங்களாகக் காட்டிய காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் வரை...
மாவீரன் அலெக்ஸாண்டர் முதல் அரசியல் நாகரிகத்தை வார்த்தெடுத்த காந்திஜி, லால்பகதூர் சாஸ்திரி வரை...
_ இப்படி பல்வேறு தலைவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களும் நிகழ்ந்த சம்பவங்களும் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன.
இந்நூல், வாழ்வில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கும் பேச்சுத்திறனை வளர்த்து மேடைகளில் ஜொலிக்க விரும்புவோருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.