விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
ரெண்டு நாளா வயித்துப்போக்கு நிக்கவேயில்லே... எதுனாச்சும் மாத்திரை கொடுங்க கடைக்காரரே...
_ மெடிக்கல் ஸ்டோரில் இதுமாதிரி கேட்டு நிறைய கஸ்டமர்கள் வருவதுண்டு.
டாக்டர் கிட்டே போனால் ஏகப்பட்ட டெஸ்டுகளை எடுக்கச் சொல்லி பணத்தைக் கறந்துடுவார்... பேசாம மருந்துக் கடைக்குப் போய் ஏதாவது ஆன்டிபயாடிக் வாங்கி போட்டுக்கலாம்...
_ உபாதையின் தீவிரம் தெரியாமல் தாங்களாகவே மருந்து வாங்கி சாப்பிடும் ரகமும் உண்டு.
இந்த அணுகுமுறையே தவறு.
திருக்குறளில் மருந்து _ அதிகாரத்தில், நோய்நாடி நோய் முதல் நாடி குறளில், என்ன நோய் என்பதைக் கண்டறிந்து, நோய்க்கான காரணத்தையும் ஆராய்ந்து, அது தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, அந்த மருந்து உடலுக்குப் பொருந்துமா என்பதையும் ஆராய்ந்து, மருத்துவம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
மருத்துவர் ஆலோசனைகளின்படி நடக்காமல், தாமாகவே மருந்துகளை நேரடியாகக் கடைகளில் வாங்கி பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை நூலாசிரியர் ஜி.சக்கரவர்த்தி இந்நூலில் தெளிவாக விளக்குகிறார்.
மருந்துகள் நம் உடலில் செயல்படும் விதத்தையும், மருந்துகளில் உள்ள வேதிப்பொருட்களின் செயல்பாடுகளையும் நூலாசிரியர் தகுந்த குறிப்புகளோடு விவரிக்கிறார்.
மருந்து விற்பனை மற்றும் தயாரிப்பு குறித்த சில சட்ட விவரங்களும் இந்நூலில் உள்ளன.
மருத்துவம் தொடர்பான பாடநூல் மாதிரியாக இல்லாமல், கசப்பு மாத்திரையை தேனில் குழைத்துக் கொடுப்பது மாதிரியாக, நகைச்சுவை இழையோட நூலாசிரியர் ஒவ்வொரு கட்டுரையையும் எழுதியிருப்பது இந்த நூலின் ஹைலைட்!