முகப்பு » ஆன்மிகம் » மூன்றாவது கோணம்

மூன்றாவது கோணம்

விலைரூ.60

ஆசிரியர் : சத்குரு ஜக்கி வாசுதேவ்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: 978-81-8476-155-9

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

மனிதர்களை சில நம்பிக்கைகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சில நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப்போடவும் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் செய்யும் நியாய_அநியாயங்களை யாரோ ஒருவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான் மனிதர்களை இன்னும் மனிதர்களாகவே வைத்திருக்கிறது. சில நம்பிக்கைகள் எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று ஆராயப்புகுந்தால் விடை காண்பது மிக அரிது. நம்பிக்கைகள் இனம், மொழி, நாடு சார்ந்து வேறுபடுபவை. நம்பிக்கைகளை பின்பற்றத் தெரிந்த மக்களுக்கு அவற்றைத் தரம்பிரிக்கத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.
சில நம்பிக்கைகள் காலாவதியாகிவிட்டவை; சில நம்பிக்கைகள் இன்று துளியும் பொருந்தாதவை. காலத்திற்குப் பொருந்தாத நம்பிக்கைகளுக்கு நாம் தொடர்ந்து உற்சாகமூட்டி வருகிறோம். இச்செயலை நாம் விட்டொழிக்க வேண்டும். ‘ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே’, ‘பொம்பிளைச் சிரிச்சாப் போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு’, ‘ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்பது போன்ற நம்பிக்கைகள் எல்லாம் பெண்ணினத்தின் மீது ஆண்கள் செலுத்திவரும் ஆதிக்கத்தின் வெளிப்பாடுகள்தான். ‘இரவிலே சென்றாலும், அரவிலே செல்லாதே’, பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை’ என்பவை ஒரு வேலையைத் தள்ளிப்போடும் சோம்பேறிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; முன்னேற வேண்டும் என்ற வேட்கை உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.
பொருந்தாத நீண்டநாள் நம்பிக்கைகள் சிலவற்றை நாம் ஒதுக்கவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். சத்குரு ஜக்கி வாசுதேவ் இதனை அழகாக கண்டுபிடித்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விளக்கி இருக்கிறார். ஆனந்த விகடனில் வெளிவந்த சத்குரு ஜக்கி வாசுதேவின் ‘கொஞ்சம் அமுதம்... கொஞ்சம் விஷம்!’ என்ற தொடரின் ஒரு பகுதியாக இந்த நீண்டநாள் நம்பிக்கைகளை அலசும் பகுதியும் வெளியானது. சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நம்பிக்கைகளை புதுமையான கோணத்தில் அணுகியுள்ளார். அந்த அலசல்களின் தொகுப்பே இந்நூல்.
‘அத்தனைக்கும் ஆசைப்படு’, ‘உனக்காகவே ஒரு ரகசியம்’, ‘கொஞ்சம் அமுதம்... கொஞ்சம் விஷம்’ வரிசையில் இந்த ‘மூன்றாவது கோணம்’ வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us