விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
மற்ற அரசுத் துறைகளை விடவும், வெளியுறவுத் துறையில் உயர் அதிகாரிகளாக பணி புரிபவர்களுக்கு வித்தியாசமான அனுபவங்கள் நிறையவே கிடைக்கும். உள் நாட்டில் மட்டுமின்றி பல்வேறு வெளி நாடுகளில் பணி புரியும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம். மாஸ்கோவில் ஒருவர் ஹை கமிஷனர் பொறுப்பில் இருக்கிறார் என்றால் ரஷ்ய நாட்டுப் பிரதிநிதிகளை மட்டும் அவர் சந்தித்துப் பழகுவதில்லை. இந்தியாவிலிருந்து பணி நிமித்தம் பயணப்படும் பல தரப்பு பிரமுகர்களும் இவருடைய உதவியையே பெரிதும் எதிர்பார்ப்பார்கள். இவருடன் இயல்பாகப் பழகுவார்கள்; ஒன்றாகச் சாப்பிடுவார்கள்; இணைந்து ஊர்சுற்றிப் பார்ப்பார்கள்.
வெளியுறவுத் துறையில் முப்பது வருடங்களுக்குமேல் உயர்பதவி வகுத்து ஓய்வு பெற்ற நூலாசிரியர் பிரேம் புத்வார், பதவி காலத்தில் தனக்கு ஏற்பட்ட அசாதாரண அனுபவங்களை இந்த நூலில் அழகுபட பதிவு செய்திருக்கிறார். ஜனாதிபதி, பிரதமரில் ஆரம்பித்து அரசியல்வாதிகள், திரைத் துறைப் பிரபலங்கள், உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் என பல்வேறு பிரபலங்களுடன் இவர் பழக நேரிட்டபோது ஏற்பட்ட அனுபவங்கள் ஒவ்வொன்றும் சிறப்பானதொரு Character Study. பிரபலங்கள் மட்டுமின்றி, தன் வீட்டுப் பணிகளுக்காக அமர்த்திக் கொண்ட சாதாரண மனிதர்களுக்கும் வி.ஐ.பி. அந்தஸ்து கொடுத்து, அவர்கள் குறித்த தன்னுடைய நினைவலை களையும் எழுதியிருக்கிறார்.
‘A Diplomat Reveals’ என்ற தலைப்பில் ‘பியர்சன்’ வெளியிட்டிருக்கும் ஆங்கில நூலின் எளிமையான தமிழாக்கம் இது.