விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
மருத்துவத்துறையில் சாதனை படைத்த அறிஞர்களின் ஆய்வு வாழ்க்கையையும் கண்டுபிடிப்புகளையும் பற்றி இந்த நூல் பேசுகிறது.
1901 முதல் 1950 வரை மருத்துவம் தொடர்பான கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி, நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கையை சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதிருக்கிறார் கே.என்.ஸ்ரீனிவாஸ். இடையில் ஒன்பது ஆண்டுகள் (1915-, 1916, 1917, 1918, 1921, 1925, 1940, 1941, 1942) உலகப் போர்கள் நிகழ்ந்த காலங்களிலும், அசாதாரண சூழல் நிலவிய காலங்களிலும் நோபல் பரிசுகள் வழங்கப்படவில்லை.
இன்று மருத்துவத் துறை பெருமளவு வளர்ச்சி அடைந்து, பெரும்பாலான மக்களுக்கு நோய்கள் குறித்த பயம் நீங்கியிருக்கிறதென்றால், அதற்குக் காரணம், இந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி விளைவுகளே! பிறர் நலமுடன் திகழ தன்னலம் மறந்து உழைத்த மருத்துவ வல்லுனர்களை அறிமுகப்படுத்தும் இந்த நூல், மருத்துவத் துறை மாணவர்களுக்கு மட்டுமல்லாது, அறிவியல் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரும் துணை புரியும்.
வாழ்வில் நமக்குப் பெருமளவில் பயன் தரும் பொருட்களைக் கண்டுபிடித்தவர்கள் பற்றி நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அரிய கண்டுபிடிப்புகள் மூலம் காலம் கடந்து நிற்கும் இந்த நோபல் மன்னர்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கை குறித்து அறிந்துகொள்வதன் மூலம் மகுடம் சூட்டுவோம்!