விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 256).
அமைதியின் உருவமாகவும் ஆற்றலின் அருவமாகவும், திகழும் சத்குரு ஜக்கி வாசுதேவ் பாதையில், தனக்குள் தன்னையே தேடுபவர்களுக்கு வழிகாட்டும் நூல் இது. எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி ஒழுகும் மனிதர் எத்தனை பேர் உள்ளனர்? ஆனால், அப்படி வாழுபவர் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். தன்னையறிந்து, இன்புற வேண்டும்; உலக வாழ்வியலைப் புரிந்து கொள்ள வேண்டும்; உயிர்களின் உன்னதத்தை உணர்த்திட வேண்டும் என்றும் ஆழ்ந்த கருத்துக்கள் எளிமையாகப் புரிய வைக்கப்பட்டுள்ளன. சத்குரு தம் வாழ்வில் நேர்ந்த நிகழ்வுகளைக் கொண்டும், கதைகள் வாயிலாகவும் அன்பின் பாதையில் மக்களை வழிநடத்திச் செல்ல "ஆயிரம் ஜன்னல் என்றும் கட்டுரைத் தொடரை ஆனந்த விகடனில் எழுதி வந்தார். அக்கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பக்கத்திற்குப் பக்கம் படங்கள் அருமையான அச்சு மேலும் சிறப்பை சேர்க்கிறது.