புலவர் மா.கி.ரமணன். வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-600 004. (பக்கம்: 176)
தமிழக அரசின் நல்லாசிரியர் விருதைப் பெற்றவர் இந்நூல் ஆசிரியர். அத்துடன் மிகச் சிறந்த ஆன்மிகப் பேச்சாளராகவும் திகழ்பவர். இவர் ஆற்றிய உரைகளில் சில, ஆன்மிக இதழ்களில் எழுதிய கட்டுரைகள் சில என்று 16 சிறந்த கட்டுரைகள் அடங்கிய சிறந்த நூலாக வெளி வந்திருக்கிறது இந்த நூல்.
எல்லாக் கட்டுரைகளுமே மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக பகவத் கீதையையும், திருக்குறளையும் ஒப்பிட்டு அமைந்துள்ள கட்டுரை அருமையிலும் அருமை. ஆன்மிக அன்பர்களும் தமிழன்பர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.