விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
விஞ்ஞானிகள் என்றதும் நமக்கு ஒருவித பிரமிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், அந்த மாமேதைகளும் நம்மைப் போல் நடந்தும் உண்டும் உறங்கியும் வாழ்ந்தவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது அவர்களுடன் நமக்கு ஒருவித நெருக்கம் ஏற்படுகிறது.
உலகமே போற்றும் விஞ்ஞானியாக இருந்தும் ஐசக் நியூட்டன், ‘பெரிய பூனைக்கு பெரிய துவாரம், சிறிய பூனைக்கு சிறிய துவாரம்’ என்று செய்யும் அளவுக்கு அப்பாவியாக இருந்திருக்கிறார்...
ஆராய்ச்சியில் மூழ்கிய ஃபிரெட்ரிக் காஸ், தன் மனைவி இறக்கும் தறுவாயில் இருப்பதாகத் தகவல் வந்தபோதும், ‘அப்படியா... நான் ஆராய்ச்சியை முடித்துவிட்டு வரும்வரை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லு’ என்று சொல்லியிருக்கிறார்...
_ இதையெல்லாம் படிக்கும்போது இதழில் புன்முறுவலும் இதயத்தில் தோழமை உணர்வும் ஏற்படுகிறது.
இப்படி, விஞ்ஞானிகளின் வெகுளித்தனம் வெளிப்பட்ட தருணங்களையும் சூழ்நிலைக்கு ஏற்ப எவ்விதத்தில் நடந்து கொண்டார்கள் என்பதையும் இந்த நூலில் சுவாரசியமாகப் படித்து ரசிக்கலாம்.