விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
உடலில், தேவைக்கு மேல் நிறைந்திருக்கும் உப்பு, புரதம், சர்க்கரை, தாதுக்கள் ஆகியவற்றை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தப் படுத்துவதோடு அல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சக்தியைச் சேமித்து வைக்கும் களஞ்சியமாகவும் செயல்பட்டு வருவது சிறுநீரகங்கள்தான்.
உடலில் உள்ள எலும்புகளின் சீரான வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பதும், இதய நோய்களின் அறிகுறியைக் காட்டும் கண்ணாடியாக இருப்பதும் இந்த சிறுநீரகங்கள்தான்.
அப்படிப்பட்ட சிறுநீரகங்களின் பணி, வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக நோய்கள் பற்றியும் வாசகர்கள் அறிந்து விழிப்பு உணர்ச்சி பெறும் வகையில், ஆனந்த விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ என்ற பகுதியில் கட்டுரைகள் வெளிவந்தன.
‘துப்புரவுத் தொழிற்சாலை’ என்ற தலைப்பில் டாக்டர் பி.சௌந்தரராஜன் எழுதிய அந்த மருத்துவக் கட்டுரைகள், எளிமையான நடையில் எழுதப்பட்டதால் வாசகர்கள் ரசித்துப் படித்துப் பயனடைந்தார்கள்.
விகடனில் வெளியான ‘துப்புரவுத் தொழிற்சாலை’ மற்றும் ‘மிஸ்டர் போன்ஸ்’ ஆகிய இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ _மூன்றாவது பாகம், ஏற்கெனவே விகடன் பிரசுரமாக பல பதிப்புகள் வந்து வெற்றி பெற்றது.
வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அந்த நூலிலிருந்து ‘துப்புரவுத் தொழிற்சாலை’ பகுதி மட்டும் பிரிக்கப்பட்டு, கூடுதலாக நவீன மருத்துவ முறைகள் சேர்க்கப்பட்டு, இப்போது
ஒரு தனி நூலாக வெளிவந்திருக்கிறது.