விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
உலகில் வாழ்ந்த மூத்த குடிமக்கள், இறை நம்பிக்கையில் ஆரம்பித்து, வேட்டையாடல், விவசாயம், பயணம் முதலான காலகட்டங்களில் அவ்வப்போது தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை சொலவடையாகச் சொல்லியிருக்கிறார்கள்.
மனித வாழ்க்கையின் சாராம்சத்தைப் பிழிந்து ஓரிரு வரிகளில் சொல்லப்பட்ட அந்தப் பழமொழிகள் அனைத்தும் அனுபவங்களின் எதிரொலிகள்.
அந்தப் பழமொழிகளையும், அறிஞர் பெருமக்கள் உதிர்த்த பொன்மொழிகளையும் திரட்டி எழுதியிருக்கிறார் நூலாசிரியர் செவல்குளம் ஆச்சா.
உங்கள் உள்ளங்கையில் அமர்ந்து உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்நூல், ஒவ்வொரு நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும், அள்ள அள்ளக் குறையாத அரிய பொக்கிஷமாக விளங்கும்.