பெஸ்ட் போட்டோகிராபி டுடே. 28, ஆராட்டு ரோடு, ஒழுகினசேரி, நாகர்கோவில். மொபைல்: 94434 95151
இன்றைய உலகில் புகைப்படக் கலை இளைஞர்களை ஈர்க்கும் கலை. அதுவும் டிஜிட்டல் கேமரா வந்தபின், அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. சாதாரணமாக தாய் மொழியில் கல்வி கற்ற இளைஞர் பலரும், இதன் நுணுக்கங்கள் குறித்து ஆங்கிலத் தகவல் அல்லது நூல்களைப் படித்து அறிவது பெரும் சிரமம். அக்குறையைத் தீர்க்க பேராசிரியர் ஏ.ஆர்.சி.சண்முகம் பேச்சு வழக்கில் கேமரா தொடர்பான தகவல்களை தமிழில் தந்திருக்கிறார். இதை, பெஸ்ட் போட்டோகிராபி ஏ.என்.பழனிகுமார் சிறப்பாக தொகுத்து நல்ல நூலாக உருவாக்கியிருக்கிறார். இளைஞர்கள் இந்நூலை வரவேற்பர்.