விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சிறுகதைகளில் பலவகை உண்டு. நடைமுறை வாழ்வின் யதார்த்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிற கதைகள், சமுதாயச் சீர்கேடுகளைச் சாடுகிற கதைகள், ஒரு நிகழ்வைக் கவிதையாக வர்ணித்து நம்மை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் செல்கிற கதைகள், சஸ்பென்ஸ் கதைகள், க்ரைம் கதைகள், நகைச்சுவைக் கதைகள் என பலவிதமான கதைகளையும் நாம் படித்திருக்கிறோம்.
இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை ஏடாகூட கதைகள்!
வெறுமே ஒரு கதையாக மட்டும் எழுதாமல், ஒவ்வொரு கதையிலும் ஒரு சின்ன வித்தையை செய்திருக்கிறார் கதாசிரியர் ரவிபிரகாஷ். ஒவ்வொன்றிலும் ஒரு புதிர் விளையாட்டு நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையைப் படித்து முடித்ததும், அட, அப்படியா! என்ற ஆச்சரியத்தோடு, மீண்டும் ஒருமுறை கதையைப் படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது, கதைகளில் அவர் செய்திருக்கும் வேடிக்கைகள்!
ஆனந்த விகடனில் ஏடாகூட கதைகள்! வாராவாரம் வெளிவந்தபோது, வாசகர்களிடம் பலத்த வரவேற்பு. இந்தக் கதைகள் ஒரே புத்தகமாக வெளிவந்தால் சிறப்பாக இருக்குமே என்று தங்கள் ஏக்கத்தையும் வெளியிட்டார்கள்.
வாசகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும்வண்ணம், மேலும் சில புதிய கதைகளையும் சேர்த்து, இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.