விலைரூ.60
முகப்பு » சுய முன்னேற்றம் » ஜெயிக்கத் தெரிந்த
புத்தகங்கள்
ஜெயிக்கத் தெரிந்த மனமே
விலைரூ.60
ஆசிரியர் : டி.ஏ.விஜய்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்: 978-81-89936-94-5
Rating
உழைப்பைக் கொண்ட உயர்வு என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் வளமும் நலமும் நாளும் வலம் வர வழிகளைக் காட்டுகிறது இந்த நூல்.
அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், இடர்ப்பாடுகள், வேதனைகள் இருக்கலாம்.
அவற்றையெல்லாம் முறியடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் பெற்று, வாழ்வில் முதன்மை அடையும் ரகசியங்களை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் டி.ஏ.விஜய்.
வளத்தை அள்ளித்தரப் போகும் வாழ்க்கையை புத்தம் புதிதாக அணுக வேண்டிய வழிகள்; குழந்தைகளை வருங்காலத்தில் குரோர்பதிகளாக உருவாக்கத் தேவையான தகவல்கள்; சாதாரண மனிதர்களையும் சாதனை மனிதர்களாக்கி, சரித்திர ஏடுகளை எட்டிப்பிடிக்க வைக்கும் அணுகுமுறைகள்; அசதிவரும் வேளையில்கூட, அசாதாரண செயல்களை அனாயாசமாகச் செய்வது எப்படி என்பது போன்ற தகவல்களைக் கொண்டுள்ளது இந்த நூல்.
இதில் சேமிப்பை வலியுறுத்தி, செலவைச் சிக்கனப்படுத்தும் வழிகள் சொல்லப்பட்டாலும், நியாயமான சில ஆடம்பரச் செலவுகளைச் செய்து, மனதளவில் பணக்காரத் தோரணையை வளர்த்துக் கொண்டால், உள்ளம் பணத்தை அறுவடை செய்யத் தயாராகிவிடும் என்று உளவியல் நுட்பம் பேசுகிறார் நூலாசிரியர்.
பொருட்களைச் சேர்ப்பது என்ற லட்சிய விதை ஊன்றி, முயற்சி உரமிட்டு, அயர்வை நீக்கி, வியர்வை நீர்விட்டு விளைந்திடும் வெற்றிக்கனிகளைப் பறிக்கக் காத்திருக்கும் வாசகர்களின் வாழ்வில் இந்த நூல் வசந்தத்தை வீசச் செய்யும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!