அண்ணா பல்கலைக்கழகம் (விலை)
இன்றைய ஒட்டு மொத்த உலக சமுதாயத்தின் தலையாய பிரச்னை, சுற்றுச் சூழலைப் பற்றியது தான். ஆகையால், இந்த நூல் ஒரு சிறப்பிடத்தைப் பெறுகிறது. திறமைமிக்க வல்லுனர் கூட்டுக் குழுவால் தயாரிக்கப்பட்டு, சிறந்த முறையில் பிரசுரிக்கப்பட்டுள்ள நூலான இந்தக் களஞ்சிய அகராதி, இரண்டு தொகுதிகளாக உள்ளது. இது அண்ணா பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் சிறப்புத் தகுதிக்கான திறன் மையத்தால் 2004ல் தொடக்கப்பட்ட பணியின் முடிவாகும். அகராதிப் பணி என்பதே சாதாரணப் பணியல்ல. அதிலும், சுற்றுச் சூழல் எனும் தலைப்பில் ஒரு அகராதியை உருவாக்குவது மிகப் பெரிய சாதனையேயாகும். இம்முயற்சியில் ஈடுபட்டவர்களில், 105 துறையறிஞர்கள்; 20 மொழியறிஞர்கள் எனக் கூறப்பட்டிருப்பதை நோக்குங்கால், வியப்படைகிறோம்.
அதிலும் இம்முயற்சியில், நேரான வார்த்தை மொழிபெயர்ப்பன்றி, நடைமுறைச் சொற்களைப் பயன்படுத்துதல் போன்ற கடினமான உழைப்பு வேண்டியிருந்திருக்கிறது. 5000 தலைப்பு
களுக்கும் மேற்பட்ட கலைச் சொற்களுக்கான விளக்கங்கள் இம்முயற்சியில் இடம் பெற்றுள்ளன .
அகராதி இறுதிச் சீராக்கக் குழு, துறை சீர்தூக்கல் குழு மற்றும் மொழி சீர்தூக்கல் குழு என்ற குழுக்கள், கட்டுரை விளக்கவுரையாளர்களின் விளக்கங்களைச் சரிபார்த்துள்ளன. குழுக்களில் இடம் பெற்றுள்ள எல்லா முனைவர்களும் ஏதோ ஒரு வகையில் தனிச்சிறப்புடையவர்கள்.இவர்களெல்லாம் சேர்ந்து ஒரு மாபெரும் முயற்சியை வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர் என்பதைக் காண்கையில், இது ஒரு சாதாரண சாதனையல்ல . இம்முயற்சியை ஒரு வேள்வியெனவே கொள்ளலாம். இரண்டரை ஆண்டுப்பணியின் சிகரமாக, ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது தமிழ்த்தாய்க்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆற்றியுள்ள சிறந்த தொண்டெனவே கருதப்பட வேண்டும்.
இவ்வகராதியின் இரண்டு முக்கியப் பகுதிகளாக, கலைச் சொல் அகராதி, கலைச் சொல் விளக்க அகராதி ஆகிய இரண்டு தலைப்புகளையும் தன்னுள் கொண்டுள்ளது. பல உயர்நிலை ஆய்வு மையங்களைக் கலந்தாலோசித்து ஆக்கப்பட்ட இந்த அகராதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறந்த வெற்றிகளில் ஒன்றாகவே உருவெடுத்துள்ளது.
முனைவர் வா.செ.குழந்தைசாமி, தமது அணிந்துரையில் கூறியுள்ளது போல, "நமக்கு அறிவியல், தொழில்நுட்ப பாரம்பரியம் உண்டு. எனினும், இன்றைய நடைமுறையில் பயன்பட்டு வரும் அறிவியலும், தொழில் நுட்பமும் நமக்குப் புதியன. மேலை நாடுகளில் கற்று நாம் பயன்படுத்துவன. சான்று கூற வேண்டுமெனில், மருத்துவம் நமக்குப் புதிதன்று. எனினும், அலோபதி மருத்துவம் நமக்கு முற்றிலும் புதிது. அதையொத்தனவே இன்றைய அறிவியலும் தொழில் நுட்பமும்.ஆகையால், கடந்த சில நூற்றாண்டுகளில், மேலை நாடுகளில் ஏற்பட்ட சீரிய வளர்ச்சியில், நமது நாடு முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஆகையால், அறிவியல் மொழி வளர்ச்சியில் பின் தங்கியிருந்தோம் என்பதே உண்மை. அதை ஈடு செய்ய வேண்டுமெனில், மொழி வளர்ச்சி முக்கிய பங்கேற்க வேண்டும். அதைத் தான் இந்த பெரும் வேள்வியான அகராதி தொகுப்பது, இந்த அறிஞர் பெருமக்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏனெனில், நாடு விடுதலை பெற்ற போது 250 வருடங்களாக அறிவியல் முன்னேற்றம், மொழி ரீதியாகத் தடை பட்டிருந்தது. அதுவும் மொழியியலில் இத்தடை அதிகமாகவே இருந்திருக்கிறது. ஆங்கிலத்தின் தாக்கம், இதற்கு ஒரு வகையில் காரணமானாலும், தமிழில் இதற்கான முயற்சிகள் இன்மையும் கருதப்பட வேண்டும். அந்த இடைவெளியை நீக்க அண்ணா பல்கலைக்கழகம் எடுத்திருக்கும் பல முயற்சிகளில் இவ்வகராதி அமைப்பு மிகச் சீர்மையானதாகக் கருத வேண்டு