விலைரூ.115
புத்தகங்கள்
உலக சினிமா (பாகம் 2)
விலைரூ.115
ஆசிரியர் : செழியன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: பொது
ISBN எண்: 978-81-89936-88-4
Rating
இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, கோபத்தை, காதலை திரையில் மொழிபெயர்ப்பதே உலக சினிமா.
எங்கோ, யாருக்கோ அல்லது இங்கே நமக்கு என்கிற சுவர்களை உடைத்து ஒவ்வொரு இதயத்துக்கும் நம்பிக்கையை, அன்பை, ஒளியைப் பாய்ச்சுவதே படைப்பின் பெருங்கனவு! செய்தி உலகின் உன்னதத் திரைப்படங்களைப் பற்றி பேசுவதே இந்த நூல்.
ஒவ்வொரு சினிமாவைப் பற்றியும் தனக்கான பறவைமொழியுடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன்.
ஆனந்த விகடனின் வெற்றித் தொடர்களில் ஒன்றான உலக சினிமாவை எழுத்தால் செதுக்கிய செழியனின் இந்தக் கட்டுரைகளே இந்த நூலாகியுள்ளது. இதன் இரண்டாம் பாகம் இது. திரைத் துறையில் சாதனை படைக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!