ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி சொசைட்டி, 11, கமலா 2வது தெரு, சின்ன சொக்கிகுளம், மதுரை-625 002.
"அணையின் நீர் மட்டம் 152 அடியாக இருந்தால் தான் அணையில் இருந்து 10.574 மில்லியன் கன அடி நீர் பயன்படுத்த முடியும். 136 அடியாகக் குறைக்கப்பட்டதால் 5580 மில்லியன் கன அடி நீர் வீணாக போகிறது. இதனால், தமிழகத்துக்கு 55 கோடியே 80 லட்ச ரூபாய் விவசாய உற்பத்தி இழப்பு ஆண்டுதோறும் ஏற்படுகிறது (பக்.18).கேரள அரசுக்கு (நமது அணைக்கு சென்று வர கேரள அரசிடம் அனுமதி கட்டணம் செலுத்த வேண்டும்) படகு போக்குவரத்து மூலம் மட்டும் 200 கோடியே 82 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் ஆண்டு வருமானம் கிடைக்கிறது (பக்.35-36).இப்படி ஏராளமான புள்ளி விவரங்களுடனும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் விவரங்களுடனும் வெளியாகியுள்ள இந்நூல், தமிழகத்தைக் கேரளா எந்தெந்த வகைகளில் எல்லாம் வஞ்சித்து வருகிறது என்பதை புள்ளி விவரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றன. பொதுநல அமைப்புகளும், நிறுவனங்களும் இந்நூலை ஏராளமாக அச்சிட்டு மக்களுக்கு வினியோகித்தால் தான் தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, கொஞ்சமாவது விழித்தெழ உதவும்.