பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25,பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14.
ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மாறி மாறிப் போரிட்டு, இந்திய தேசத்தை, குறிப்பாகத் தமிழ் நிலப்பரப்பை முழுவதுமாக யார் ஆக்கிரமிப்பது என்று முனைப்பு காட்டிக் கிடந்த பதினேழாம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஒரு காலக்கட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தரங்கப் பிள்ளை, புதுவையில் கால் பதித்த பிரெஞ்சு, ஆங்கிலேயர்களின் பூசல், ஆதிக்க முயற்சிகள், தமிழகப் பாளையக்காரர்களின் பிரச்சனைகள், ஆற்காடு நவாபுகளின் வாரிசுச் சண்டை என சகல விவரங்களையும் நாள் வாரியாக எழுதி வைத்துள்ள பத்து டைரிகள் முன்பே வெளிவந்துள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலக்கட்டத்தின் அரிய வரலாற்று ஆவணங்கள் அவை என வரலாற்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.அதில் சிரீமுக என்கிற ஓராண்டு நிகழ்வுகளின் வரலாற்றுச் செய்திகளை நமக்கு எடுத்து விவரிக்கிற சிறப்பான நூல் இது.