வள்ளி சுந்தர் பதிப்பகம், எண்.84/14, மீர்பக்சிஅலி தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 152).
"கருவறையின் அதிர்வுகள்' துவங்கி, "இணைய வெளிப்பந்தலில்' ஈறாக சுமார் 16 இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இதில் அடக்கம். "மனித உடலின் வலப்பக்கம், இடப்பக்கம் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டாலும் அதை அந்த உடலின் ஊனம் என்றே கருதுகிறோம். அதுபோல சமுதாயத்தில் "ஆணும் பெண்ணும்' என்று "வெளிச்சத்துக்கு வராத வேதனைக் காட்சி'களைக் கண் முன் நிறுத்தும் இக்கட்டுரையாசிரியரின் "மும்பையில் தமிழ் இலக்கியம்,' "விழி தேடும் விடியல்கள்,' "தீக்குள் விரலை வைத்தால்' போன்ற விமர்சனக் கட்டுரைகள் இலக்கியங்கள் மீதும் அதையும் விஞ்சி சமுதாயத்தின் மீதும் அவர் கொண்டுள்ள நேயம் பற்றி பறை சாற்றுகின்றன. "புதிய மாதவி, அரபிக் கடலோரப் புயல்... அது காயப்படுத்தாது, நியாயப்படுத்தும், அவரது கோபமும் நியாயமானது தான்' என்ற மாலன் கூற்றில் உள்ள உண்மை இந்நூலை வாசிப்பவர்களுக்கு புலப்படும்.