அல்லி நிலையம், 28/19, முத்து முதலி தெரு, வேப்பேரி அஞ்சல், சென்னை - 07. (பக்கம்: 134)
பேருக்குப் பேராசிரியராக இல்லாது, உண்மையாகவே பெருமைக்குரிய பேராசிரியராகத் திகழ்ந்தவர் அ.கி.பரந்தாமனார். சென்னை தூய பவுல் உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைத் தியாகராசர் கல்லூரியிலும் இவராற்றிய தமிழ்ப்பணியே இதற்குச் சான்றாகும். இவர் குறித்த ஓர் அருமையான தொகுப்பு நூலே இந்நூல். முனைவர் தமிழண்ணல் தம் கட்டுரையில், பரந்தாமனார், வட சொற்கலப்பை, "வடசொல் உதவி என்று எழுதியுள்ளதையும் (பக். 11); கவிஞர் மு.மேத்தா தம் கட்டுரையில் அ.கி.பரந்தாமனாரின் தோற்றத்தை விவரிப்பதும்(பக். 30); பரந்தாமனார், நோயுற்ற தம் மனைவியை நாற்பது ஆண்டுகள் பேணி வந்துள்ளதைக் கூறி, அவரை யோகி என்றும் ஞானி என்றும் கூறுவதும் (பக். 51) அனைவரும் படிக்க வேண்டிய செய்திகள். இந்நூலை, பரந்தாமனாரின் மகன் சோமசுந்தரம் தொகுத்திருப்பது சாலச்சிறந்தது.