செந்திவேல் பதிப்பகம், 30/1, ஐஸ்வர்யா அபார்ட்மென்ட்ஸ், ராஜாஜி தெரு, நேரு நகர், குரோம் பேட்டை, சென்னை - 600 044 (பக்கம்: 160)
சிறப்புக் கண்ணோட்டத்தில் சங்க இலக்கியத்தை அலசி ஆராயும், ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. பிறரினும் வேறுபட்ட அவ்வையாரின் தனிச்சிறப்புகளை, உளவியல் நோக்கில் அலசுகின்றன இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகள்.சங்க இலக்கியத்தில் காணப்படும், பேச்சு நடையின் அடிப்படைகளை சான்றுகளுடன் ஆய்கின்ற ஆய்வுக் கட்டுரையும், மேலாண்மை இயல், அச்சகத் தமிழ் மற்றும் அகப்பாடல்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. "அகப்பாடலில் அவர் எனும் கட்டுரை சங்க காலம் முதல், இன்று வரையில், தமிழ்ச் சமூகத்தாரிடம் நிலவுகின்ற "அவர் எனும் சொல், கணவனை அழைக்கின்ற வழக்கினைக் குறித்து சுவைபட ஆராய்கிறது. அன்று முதல் இன்று வரை, ஒரு பறவைப் பார்வையில், மேற்கொள்ளப்பட்ட, ஓர் ஆய்வுப்பயணமே இந்நூலாகும். "தமிழ் "செவ்வியற் செம்மொழி என அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், சிறந்த ஈடுபாட்டுடன் எழுதப்பட்டுள்ள, அரிய நூல் இது என தமிழ் அறிஞர் தமிழண்ணல் அணிந்துரையில் எழுதியுள்ளார். இந்நூல் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கும் ஆய்வு <உலகத்தினருக்கும் பெரிதும் துணை நிற்கும்.