நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை- 600 098. (பக்கம்: 504)
இந்தியாவில் முகலாய அரசை ஒரு பேரரசாக உருவாக்கியவர் அதிபர். தமது ஆட்சிக் காலத்தில் ஜரோகர் - இ - தர்ஷன் என்றும் ஏற்பாட்டைப் புகுத்தினார். ஜரோகாவில் (காட்சி மண்டபம்) அவர் தோன்றி மக்களுக்குத் தரிசனம் தந்த பின்னர் திறந்த வெளியில் தர்பார் நடத்தி ஜாதி, மத பேதமின்றி, ஆண், பெண் வேறுபாடின்றி எவரும் மன்னரிடம் நேரிடையாக விண்ணப்பங்கள் தரலாம்.தங்கள் வழக்குகளை நேரடியாக மன்னரிடம் அவர்கள் தெரிவிக்கலாம். இப்படி பல நிர்வாகக் கொள்ளைகளை அவர் வகுத்தத் தந்திருக்கிறார். மேலும், பல அரசாங்கத் துறைகள், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் கடமைகள், நீதி வழங்கும் திட்டம்ஆகியவை பற்றியும் அவர் வகுத்த கொள்கைகள் மிகச் சிறப்பானவை.
மிகப் பரந்த நிலப்பார்வை ஆட்சி செய்வதற்கான ஒரு முறையான நிர்வாக அமைப்பை உருவாக்கி அதை வெற்றிகரமாகவும் இயக்கியவர். அதில் இருந்து ஜகாங்கீர், ஷாஜஹான் காலம் வரை முகலாய அரசர்கள் அந்த முறையான நிர்வாகத்தை மேற்கொண்டு எப்படி திறம்பட ஆட்சி செய்தனர் என்று மிக விரிவாக ஆராய்வது இந்நூல். வரலாற்றுப் பிரியர்களுக்கு ஒரு அருமையான விருந்து.