பாரதி புக் ஹவுஸ். டி-28, மாநகராட்சி வணிக வளாகம், பெரியார் பேருந்து நிலையம், மதுரை-625 001. (பக்கம்: 266).
தலைமைக் காவலர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றுப் படைத்துள்ள நூல் இது. கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலான இலக்கியங்களிலும் தேனூர் இடம் பெற்றுள்ள தன்மையை நூலாசிரியர் அழகாக விளக்கியுள்ளார். அழகர் தேனூருக்கு வரும் வழியில் பெற்றுள்ள மண்டகப் படிகள், சித்திரைத் திருவிழாவின் சிறப்புகள். அழகர் வழிபாட்டு முறை முதலானவற்றை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. சித்திரைத் திருவிழாவின்போது நடைபெறும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகளையும் இந்த நூல் விரிவாக விளக்குவதுடன் அந்த விழாக்களின் போது வெளியிடப்படும் அழைப்பிதழ்களை பின்ணிணைப்பாகக் கொண்டுள்ளது. மேலும், தேனூர் திருவிழா தொடர்பான பல்வேறு படங்களையும் இணைத்துத் தந்துள்ளதால் நூல் பொலிவு பெற்று விளங்குகிறது. கல்வித் துறைக்குத் தேவையான அத்தனை தகுதிகளையும் பெற்றுள்ள ஆறுமுகம் காவல் துறையில் பணியாற்றுவதால் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் சீர் பெறும் என்று நம்பலாம்.