சாந்தா பதிப்பகம், 13/5, ஸ்ரீபுரம் 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்கம்: 336 ).
ஆசிரியரின் கவிதை வாழ்க்கை பொன்விழாவை கண்ட ஒன்று. 50 ஆண்டுகளில் சிற்றிதழ்களிலும், பெரிய ஏடுகளிலும் எழுதி வெளிவந்த அவரது கவிதைகள் தொகுக் கப்பட்டு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. "ஞானச் செல்வனின் கவிதைகள், உணர்வுக்கு உரம் சேர்க்கின்றன, அறிவுக்கு வளம் தருகின்றன, மகிழ்வுக்கு இதமளிக்கின்றன. பெருமைகளை போற்றுகின்றன. விடுதல் அறியா விருப்பினை ஊட்டுகின்றன என்று தனது அணிந்துரையில் குறிப்பிடுகிறார் பிரபலத் தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார். இதை விடச் சிறந்த பரிந்துரை ஏது? கவிதை அன்பர்களுக்கு இந்நூல் பெரிதும் மகிழ்ச்சி ஊட்ட வல்லது. தமிழை வளர்க்கும் பெரிய பணியில் இன்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் சிறப்பாக பவனி வரும் ஆசிரியர் கவிதைகள் சிந்தனைக்கு உரமூட்டுபவை.