தமிழய்யா வெளியீட்டகம், ஒளவை கோட்டம், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம். (பக்கம்:800)
அவ்வையாரின் அற நெறிகளைப் பரப்புவதற்காக அமைக்கப் பட்ட திருவையாறு ஒளவைக் கோட்டத் தார், பல ஊர்களில் ஆய்வு மாநாடுகள் நடத்தி, அங்குக் கருத்தரங்கில் படிக்கப்படும் கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டு, தமிழ்ப் பணி செய்து வருகின்றனர். நாகப்பட்டினத்தில் நடத்திய ஏழாவது ஆய்வு மாநாட்டில் வரலாற்றுத் தமிழ் என்ற பொருளில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், படிக்கப்பட்ட கட்டுரைகளில், 86 கட்டுரைகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில கட்டுரைகள் தெளிவின்றி உள்ளன. எடுத்துக்காட்டாக; 86வது கட்டுரையைச் சொல்லலாம். தமிழ் மொழியின் பல பேச்சு வழக்குகள், தமிழ்த்தென்றல் திரு.வி.க., டாக்டர் மு.வ., போன்ற அறிஞர்களின் வரலாறுகள், எழுத்துச் சீர்திருத்த வரலாறு ஆகியன பயனுள்ள கட்டுரைகள்.