திருமுடி பதிப்பகம், 40, கிழக்குச் சன்னிதித் தெரு, வில்லியனூர், புதுச்சேரி-605 110. (பக்கம்:144 ).
செப்பேடுகள், மன்னர் கால வரலாற்றுச் செய்திகளை நாமறியப் பெருந்துணை புரிவன எனலாம். அரச மரபு, மெய்க்கீர்த்தி, அரசர்கள் அளித்த கொடை விவரங்கள் போன்றவற்றை ஏராளமான செப்பேடுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் செப்பேடுகள் மிக அதிகம் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்நூலாசிரியர், பல்லவர், சோழர், பாண்டியர் காலச் செப்பேடுகளையும், மற்றுமுள்ள நாயக்கர், சேதுபதிகள், ஆதீன கர்த்தர்கள் போன்றோர் வெளியிட்டுள்ள செப்பேடுகள் பலவற்றையும் ஆய்ந்து, அவற்றில் புதுவை மாநிலம் பற்றிய தொடர்புடைய செய்திகளைச் சேகரித்து, இந்த நூல் வாயிலாக நமக்களித்துள்ளார். வரலாற்று ஆர்வமுடையோர் வாசித்து மகிழவும், போற்றவும் சிறப்பாக அமைந்துள்ள நூல் இது.