காவ்யா, 16, 2வது குறுக்கு வீதி, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 397).
"குற்றால முனிவர் என்று தமிழன்பர் களால் புகழ்ந்து பேசப் பட்ட ரசிகமணி தமிழறிஞர்களின் நண்பர். மிகச் சிறந்த இலக்கிய ரசிகர். கவிதை வாசிப்பில் புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்தவர். அவரோடு வாழ்ந்து அவருடன் பழகிய சம காலத்தவர்கள் 47 நபர்களிடம் இருந்து கட்டுரைகளை வாங்கித் தொகுத்திருக்கிறார். காவ்யா சண்முகசுந்தரம் ஏற்ற பணியைச் சிறப்புறச் செய்து முடித்திருக்கிறார் என்பதைப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் உணர்கிறோம். கவிமணி, ராஜாஜி, கல்கி பி.ஸ்ரீ., போன்ற பிரபலங்கள் உட்பட பலருடைய கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த தொகுப்பு நூல். ரசிகமணியை நன்கு தெரிந்து கொள்ள பெரிதும் உதவும்.