செந்தில்வேல் பதிப்பகம், 30/ஐ, ஐஸ்வர்யா அப்பார்ட்மென்ட்ஸ், ராஜாஜி தெரு, நேரு நகர், குரோம்பேட்டை, சென்னை,
பக்தி, இலக்கணம், உளவியல் எனும் நிலைகளில் எழுதப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சம்பந்தர் பாடல்களின் அகப்பொருள் கூறுகள், ஒப்பியல் பார்வையில் ஆராயப்படுகின்றன. அருணகிரியாரின் கவிமாண்பும், தமிழ்த் தெய்வம், தெய்வத் தமிழ் போன்ற சொல் ஆய்வும் சிறப்புற ஆராயப்படுகின்றன.இலக்கியத்துடன் இலக்கணத்தையும் சிறப்புற இந்நூலில் ஆசிரியர் அலசுகிறார். இளம்பூரணரின் தனித்துவத்தை ஒரு கட்டுரை ஆராய, மற்றொரு கட்டுரை பண்டிதமணியின் திருவெம்பாவையை அலசுகிறது. சங்க இலக்கியத்தின் பாங்கனையே பாட்டுடைத் தலைவனாக்குகிறது மற்றொரு கட்டுரை."உரிப்பொருள் உவமேயம் ஆகுமா இவ்வினாவுக்கு விடை தருகிறது மற்றொரு கட்டுரை. மற்றொரு கட்டுரையில், ஒரே பாடலுக்கு நேர் எதிர்த்துறைகள் பொருந்துமா என சங்கப் பாடல்களைக் கொண்டு ஆராய்கிறார் நூலாசிரியர். சங்க இலக்கியம் முதல் உளவியல் வரை, பல துறைகளில் இந்நூல் தொட்டுத் துலக்குகிறது. தமிழில் ஆய்வு செய்ய விரும்புவோருக்கு வழிகாட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.