விலைரூ.150
புத்தகங்கள்
என் குருவின் புனித திருவடிகளில்
விலைரூ.150
ஆசிரியர் : அருணாசலம்
வெளியீடு: பதிப்பக வெளியீடு
பகுதி: ஆன்மிகம்
Rating
பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயம், தியானயோகம் பற்றி அலசி ஆராய்கிறது. இந்த அத்தியாயத்தின் நாற்பத்தி ஆறாம் ஸ்லோகத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவார், "தவம் செய்யும் முனிவர்களை விட யோகி சிறந்தவன். ஞானிகளை விடச் சிறந்தவன். கர்மத்தைச் செய்பவர்களை விட மேலானவன் இந்த கூற்றுக்கு சரியான உதாரண புருஷர்களாக ஒரு சிலரை மட்டுமே நம்மால் இன்று குறிப்பிட முடியும். அந்த வரிசையில் யோகி ராம் சுரத்குமாரின் பெயரை தவிர்க்கவே முடியாது.விசிறி சாமியார் என அன்பர்களால் மரியாதையுடனும், பக்தியுடனும் அழைக்கப்பட்ட யோகியைப் பற்றி நீதித்துறையில் அனைவரும் போற்றும் வகையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜஸ்டிஸ் டி.எஸ்.அருணாசலம் எழுதியுள்ள மிகச்சிறந்த புத்தகம், அழகாக நேர்த்தியுடன் அச்சிடப்பட்டு அன்பர்களுக்காக வெளியாகியுள்ளது. யோகி ராம் சுரத்குமாரின், "ஸ்திதப்பிரக்ஞம் பற்றியும், "நிஷ்காம்ய கரிம யோகம் பற்றியும் எளிய தமிழில் அற்புதமான அநேக விஷயங்களை நம் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர். கங்கைக் கரையிலும், புனித காசியிலும் உலாவிய இந்த "விசிறி மகான் தென்னாட்டில் அருணை மாநகரில் அமைதியாக நிகழ்த்திய ஆன்மிக யக்ஞம் பற்றிப் படிக்கப் படிக்க நெஞ்சம் நெகிழ்ச்சியடைகிறது.இந்த புத்தகத்தில் யோகியுடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், யோகிக்கு பரமாச்சாரியார், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஷீரடி புட்டபர்த்தி சாயிபாபா ஆகிய ஆன்மிகச் சான்றோர்களுடன் பழகியதில் பெற்ற அனுபவங்களையும் சுவைபட விவரித்து மனதில் ஆழப் பதியும் வகையில் எழுதியிருக்கிறார் ஜஸ்டிஸ் டி.எஸ்.அருணாசலம்.நாற்பத்தியோறு கட்டுரைகள். மிக நன்கு எழுதப்பட்டுள்ளன. யோகி ராம் சுரத்குமாரின் அன்பர்களும், அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களும் படித்துப் பயன் பெற வேண்டிய புத்தகம். கண்களுக்கு விருந்தாக சில ஆன்மிகப் பெரியோர்களின் வண்ணப்படங்கள் நூலுக்கு சிறப்புச் சேர்க்கின்றன.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!