முகப்பு » இலக்கியம் » சொல்வலை வேட்டுவன்

சொல்வலை வேட்டுவன்

விலைரூ.450

ஆசிரியர் : பா.ரா.சுப்பிரமணியன்

வெளியீடு: கயல்கவின் புக்ஸ்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை

கயல் கவின், 16/25, இரண்டாவது சீவேடு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை -600 041. (பக்கம்: 400)

நாட்டுப்புறவியல் இலக்கிய ஆய்வுக்களத்திலும், பேரகராதித் துறையிலும், ஆழங்கால் புலமையும், ஆய்வுத் திறனும் கொண்ட பேரறிஞர் பா.ரா.சுப்பிரமணியன் கேரளப் பல்கலைக்கழகம், ஜெர்மனி பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் என, கல்விக் கழகங்களில் பணியாற்றும் போது எழுதப்பட்ட கட்டுரைகள், பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் படிக்கப்பட்டவைகள் என, அவைகள் முறையாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறவியல் பற்றி ஏழு தலைப்புகளில், 108 பக்கங்களில் முதல் பகுதியாகவும், அகராதியியல் என்ற தலைப்பில் 18 தலைப்புகளில் 225 பக்கங்களில் இரண்டாவது பகுதியாகவும், இறுதியாக மூன்றாவது பகுதியாக பல்வகை தலைப்பில், 9 தலைப்புகளில் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை பதிவு செய்துள்ளார்.
நேற்றைய நூற்றாண்டு வரை நாட்டுப்புற இலக்கியம் பரவலாக, அதிகமாக தமிழ் இலக்கிய களத்தில் பேசப்படாத, விமர்சிக்காத துறையாக இருந்தது. ஆனால்,  இன்றைக்கு நாட்டுப்புற கலை இலக்கியம் சுனாமி வேகத்தில் பேசப்படுவதைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில், இலக்கிய வரலாற்றில் நாட்டுப்புற இலக்கியத்தின் பங்கு எனத் துவங்கி, சங்க கால நாட்டுப்புற மரபுகள் என, முதற் பகுதியில் ஆய்வுக் கட்டுரைகளை பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
அகராதியியல் துறையின், பதிப்பாசிரியர்களில் இன்றைக்கு ஆசிரியரின் பங்களிப்பு போற்றப்படுவதற்குக் காரணம், இத்துறையில் ஆழங்கால் புலமையும், புதுமையும் செய்த பெருமகனார், அகராதியியல் தொடர்பான அனைத்து செய்திகளையும், ஆய்வு நோக்கில் ஆய்வு மாணவர்களுக்குப் பெரிதும் பயனடையும் வகையில் பல அரிய செய்திகளைத் தருகிறார். பல்கலைக்கழக துறை சார்ந்த ஆய்வு மாணவர்களுக்கு, பாடநூல் போன்றது இந்நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us