திரிசக்தி பப்ளிகேஷன்ஸ், கிரிகுஜா என்க்ளேவ், 56/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 112)
ஒரு பெண் கருவுற்றால் என்னென்ன உபாதைகளை சந்திப்பாள் என்பது முதல் துவங்கி, அந்த குழந்தை பிறந்து, வளர்ந்து, பள்ளி செல்லும் வரை அவர்களை எப்படி கவனமாக வளர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம் இந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. இதே கருத்துக்களை பலரும், பல நூல்கள் வாயிலாக வலியுறுத்தினாலும், அந்தந்த கால கட்டத்திற்கு தேவையான வகையில் சில மாற்றங்களை ஏந்தி, அவ்வப்போது புத்தகங்கள் வெளிவருவது நல்லதே.