விலைரூ.295
புத்தகங்கள்
Rating
ஆன்மிகமும் அறிவியலும் கைகோர்த்திருக்கும் நூல் இது. சித்தர்கள் உயிரை பேண வேண்டும், அதனுள் இருக்கும் கடவுளை காண வேண்டும் என ஆசைப்பட்டனர். அந்த அறிவுப்பூர்வமான ஆசையை ஆசிரியரும் கையிலெடுத்த முயற்சி தான் இந்த நூல். <
உயிரை உடனிருந்து ஓம்புகின்ற மனித உடல்தான் ஆலயம் என்பதற்கு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலை சான்றாக எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு உள் உறுப்புகளுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கும் அறிவியல் பார்வை வியக்கவைக்கிறது. பாற்கடலை வயிற்றுக்கு ஒப்பிட்டு, சிறுகுடலையும் பெருங்குடலையும், தேவ, அசுரர்களுக்கு உவமை காட்டி எழுதியிருப்பது அருமை. ஆத்மாவின் இருப்பிடம் (ண்ஞுச்t ணிஞூ ண்ணிதடூ) என்று, ணீடிணஞுச்டூஞ்டூச்ணஞீ ஐ அழகிய வண்ண படங்களோடு எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை, ஆலயத்தின் அமைப்பு எவ்வாறு பொருந்துகிறது என்று அருமையாக எழுதியிருக்கிறார். சுவாரஸ்யமாய் படிக்கத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது இந்நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!