விலைரூ.65
புத்தகங்கள்
Rating
சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 168)
"அல்வா கடையென்று அந்த ஊரில் பிரபலமாகி விட்டால், அந்தக் கடையில் உள்ள வேறு எந்த இனிப்பையும் மக்கள் வாங்க மாட்டார்கள். அல்வாவோடு அந்தக் கடையின் வாழ்வு ஒன்றிவிட்டதால் பிற இனிப்புகள் வாழாவெட்டி ஆகிவிடும். இது போலவே தான் பாரதியாரை, "மகாகவி என்று முத்திரை குத்திவிட்டதால் அவரது சுவையான சிறுகதைகள், சீர்திருத்தத் தமிழ் ஆங்கிலக் கட்டுரைகள், குறுநாவல்கள் நித்திரை பெற்று விட்டன.
இந்த குறையை இந்த சிறுகதை நூல் தீர்த்து வைக்கிறது. சிறுகதையில் பாரதி வரைந்த சிந்தனை ஓவியங்கள் மிக அருமையாக உள்ளன. பாரதியாரின் 28 சிறுகதைகளை சிறப்பாக தந்துள்ளனர். பாரதியாரின் வரலாற்றையும் முகப்பிலேயே சுருக்கமாகத் தந்துள்ளது பாராட்டத்தக்கது. அந்தரடிச்சான் சாகிப் கதை, அபயம், கடல், சும்மா, ஆனைக்கால் உதை, புதிய கோளாங்கி முதலிய கதைகளில் பாரதியாரின் நகைச்சுவையும், நடைமுறை வாழ்வுச் சிக்கல்களும், நம்பிக்கை தரும் வாழ்வியல் முடிவுகளும் வெளிச்சம் இடுகின்றன.
சும்மா குட்டிக்கரணம் போடும், பயந்து சாகும் அந்தரடிச்சான் சாகிப் தளபதியாகி, பல சன்மானங்கள் பெறுவது வேடிக்கையின் விளிம்பாகும். மிளகாய் பழச்சாமிக்கும், வாழைப்பழச்சாமிக்கும் வந்த சண்டையால், கந்தபுராணம் சொந்த புராணமாகி நின்று போன, "கிளிக்கதை அபாரமானது. ஆனைக்கால் உதை விலக்காததால் பிள்ளைகளின் பயம் விலகியது. சரியாகக் கவியைப் பாடாமல், தவறாகப் பாடித் திருத்துவதைக் "கொல்லன் கதையும், ராமணத்தை கிண்டலடித்த குதிரைக்கொம்பு கதையும், இப்படி சிறுகதை மன்னராக பாரதியை இந்நூல் அரியணை ஏற்றுகிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!