விலைரூ.195
புத்தகங்கள்
சற்று வித்தியாசமான நூலும் கூட, நாடறிந்த சிறந்த போலீஸ் அதிகாரி, நிர்வாகத் திறமைக்கு பெயர் பெற்றவர் கிரண்பேடி. மக்களுக்கு சிறந்த அளவு அதிகாரம் கிடைத்து அதற்கேற்ப நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துபவர். சமூக மாற்றங்கள் ஏற்பட எழுத்தை பயன்படுத்தும் ஆசிரியர்களில் பவன் சவுத்ரி முக்கியமானவர். இருவரும் சேர்ந்து உருவாக்கிய படைப்பு இது.எப்படி துடைப்பம் அழுக்கை அகற்ற உதவுகிறதோ அதுபோல சமூகத்திற்கு தேவையற்றவைகளை அகற்ற வழியும், அதே சமயம் வளர்ச்சிக்கு காட்டவும், எளிய ஆங்கிலத்தில் நல்ல நடையில் தரப்பட்ட குறுந்தகவல்கள் சிறப்பானவை. வாழ்வை மேம்படுத்துபவை. இதில் முதல் பகுதி வளர்ச்சிக்கானது, அதில் ஒன்று "மற்றவருடன் பேச ஆரம்பித்ததும் இரு வார்த்தைகள் பேசியதும் நீங்களாக போலியாக சிரித்து பின்பு பேச்சை தொடரும் பழக்கத்தை கைவிடுங்கள், ஒரு குழுவில் நீங்கள் இருக்கும் போது, மற்றொருவருடன் கிசுகிசுக்காதீர்கள் (பக்கம் 34). சரி வேண்டாதவைகளை ஒதுக்கும் வழிகள் குறித்து கூறப்படும் ஆலோசனைகளில் ஒன்று இதோ. அரைகுறையாக வீட்டில் ஆடையுடன் இருக்க வேண்டாம். அந்த ஆடையுடன் வீட்டில் உலா வருவதும் தேவையற்றது. (பக்கம் 147) நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூல், சிறப்பான கட்டமைப்பு, பரிசளிக்க ஏற்ற நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!