விலைரூ.55
புத்தகங்கள்
அறிவியலும் போலி அறிவியலும்
விலைரூ.55
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்
பகுதி: அறிவியல்
Rating
பாவை பப்ளிகேஷன்ஸ், 16/142 ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14. (பக்கம்: 132.
கி.மு., 2000 முதல் கி.பி., 2000 வரையிலான நான்காயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்த பிரமிக்கத்தக்க அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புரட்சி வாயிலாகக் கிடைக்கப் பெற்ற அரும்பெரும் கண்டுபிடிப்புகள், சாதனைகள் யாவும் இந்நூலில் பகுத்து ஆராயப்பட்டுள்ளன. புவியியல், இயற்பியல், வேதியியல், வானவியல், உலோகவியல் கணிதவியல் மட்டுமல்லாது, இன்றைய விந்தைகளான மின்மயம், தானியங்கி (ரோபோ) மயம், அணு ஆற்றல் வளர்ச்சி, மரபணு உயிரியல், உயர்வுத்தோற்றம், கணிப்பொறி, இணைய தளம், நுண்தொழில் (நானோ) நுட்பவியல் குறித்த தகவல்களும் இடம் பெறுகின்றன.
ஆயினும், போலி அறிவியலைச் சாடும் சாக்கில், நூலாசிரியர் விதண்டாவாதமாக, நூலெங்கிலும் ஆன்மிக வாசகர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக சோதிம் வாஸ்து மோசடிகள் (பக்: 41), யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்ற வளமாக நடைபெறும் ஆன்மிக வைத்தியம், வியாபாரம் (பக்: 42), பிராமணிய ஆத்மா- பரமாத்மா பித்தலாட்டம் (பக்: 88) என்றெல்லாம் தேவையின்றி, சகட்டுமேனிக்கு வசை பாடியுள்ளார்! விளைவு? அறிவியல் நூல் நையாண்டி நூலாகி விட்டது! இவரது வாதத்திற்கு, சிங்காரவேலர், லெனின், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் போன்ற கம்யூனிச இயக்க அறிஞர்களின் கருத்துரைகளை முன் வைத்து தாம் ஒரு பகுத்தறிவாளர், காம்ரேடு எனவும் பறை சாற்றிக் கொண்டதில் வியப்பேது? தி.க.,வினர், கம்யூனிசத் தலைவர்களை உவகைப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது இந்நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!