விலைரூ.120
புத்தகங்கள்
Rating
(பக்கம்: 344) இந்த ஆண்டு வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப "கல்கி தீபாவளி மலர் வெளிவந்திருக்கிறது. வழக்கம் போல ஆன்மிகப் பகுதிகள், குழந்தைகளை குதூகலப்படுத்த "கோகுலம் பக்கங்கள் மகளிர் மனம் கவரும் வகையில் சிறப்பு பகுதி, கவிதை மடல் பகுதிகள் - இரண்டு என படித்துப் பார்த்து சுவைத்து மகிழ நிறைய விஷயங்கள். வேளுக்குடி கிருஷ்ணன், "ஆழ்வார்களும் தமிழும் என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் அரிய கட்டுரை ஒன்றை வழங்கியிருக்கிறார். அட்டைப் படத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளது சுகி.சிவத்தின் கட்டுரை. அமரர் கல்கியின் வைரமோதிரம் (காணாமற் போகாதது) கதைக்கு கோபுலுவின் படம் கூடுதல் சிறப்புச் சேர்க்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய வித்தியாசமான கதைக்களம் இரா.முருகன் எழுதியுள்ள "ரங்காசேட் கதை, இந்திரா பார்த்தசாரதி ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். பிரபல நகைச்சுவை நாடகாசிரியரான கிரேசி மோகன் "நீலம் என்றொரு நகைச்சுவைக் கதை எழுதியிருக்கிறார்.
கவிதைப் பக்கங்களை, தமிழச்சி தங்கபாண்டியன், யுக பாரதி, நா.முத்துக்குமார், திலகபாமா முதலிய பிரபலங்களின் கவிதைகள் அலங்கரிக்கின்றன. கோகுலம் - பக்கங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, புதுவைப் பல்கலைக் கழகத்தில் நிகழ் கலைத் துறையில் தற்போது பேராசிரியராகப் பணிபுரியும் நாடகக் கலைஞனுடன் நிகழ்த்தியுள்ள பேட்டியைச் சொல்லலாம். நாடகக் கலையில், குறிப்பாகக் குழந்தைகளுக்கான நாடகத் துறையில் இப்படியொரு அற்புதமான கலைஞர் பற்றிய தகவல் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். மங்கையர் மலர் பக்கங்களில் ஓவியர் பிஸ்வாசின் ஓவியங்களும் அவர் பற்றிய தகவல்களும் புதியவை. அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியுள்ள இந்த வங்கத்து இளைஞனை "கல்கி வாயிலாக தெரிந்து கொள்கிறோம். கல்கி தீபாவளி மலரில் வண்ணப் படங்கள் அருமை.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!