விலைரூ.100
புத்தகங்கள்
Rating
(பக்கம்: 404 ). பிரபல ஓவியர் பத்மவாசனின் அவதாரங்களை வெளிக்காட்டும் வண்ண ஓவியத்தை கண்களுக்கு விருந்தாய் அட்டையில் போட்டிருக்கின்றனர். மிகச் சிறந்த ஆன்மிகவாதிகளான வேளுக்குடி கிருஷ்ணன், சுதா சேஷய்யன், சுகி. சிவம், ஸ்ரீபரத்வாஜ சுவாமிகள், ஜஸ்டிஸ் டி.எஸ்.அருணாசலம் ஆகியோரின் அற்புதமான கட்டுரைகள் மலரை அலங்கரிக்கின்றன. சோ, விக்ரமன், அருட்செல்வர் நா.மகாலிங்கம் ஆகியோரின் படைப்புகள் வாசகர்களின் பசிக்கு ஆரோக்கியமான ஆகாரமாக அமைந்துள்ளன. அமரராகிவிட்ட அற்புத மேதைகளான ராஜாஜி, கிருபானந்தவாரியார் ஆகியோர்களின் எழுத்துக்களுடன் அமரநிலை எய்திவிட்ட அனுராதா ரமணனையும் இந்த மலர் வாயிலாக நேசம் பாராட்டும் வாய்ப்பை மலர் தயாரிப்பாளர்கள் வழங்கியுள்ளனர்.நாணயவியல் அறிஞரான தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நுண்மான் நுழைபுலத்துடன், ஆய்வு நோக்கில் எழுதியுள்ள, "தமிழகத்தில் கண்டெடுக்கப் பெற்ற சீனாவின் நாணயங்கள் தமிழ் கூறும் நல்லுலகம் படித்து பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ள விரிவான, விளக்கமான கட்டுரை. குற்றால முனிவர் டி.கே.சி., குறித்து அருளாளர் இராம.வீரப்பன் எழுதியிருக்கிறார். இந்தத் தலைமுறையின் சிறந்த கவிஞர்களான பா.விஜய், கவியோகி வேதம், இலக்கியச் சக்ரவர்த்தி இளந்தேவன் ஆகியோரின் கவிதைகள் மலரை அலங்கரிக்கும் சுவையான பகுதிகள். சிறந்த ஓவியர்களான ம.செ.வேதா, ஜி.கே.மூர்த்தி, மாருதி ஆகியோரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. கலைமாமணி யோகாவின் வண்ணப் புகைப்படங்கள் நன்றாக உள்ளன.ஜீவன் முதல் பரமாச்சார்யாரின் கருத்துக்கள் பக்த கோடிகளின் நெஞ்சத்தைத் தொடும் வகையில் உள்ளன.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!