விலைரூ.100
புத்தகங்கள்
Rating
பிரபல எழுத்தாளர்களின் ஆன்மிக கட்டுரைகள் 12, சிறுகதைகள் 12, கவிதைகள் 13 மற்றும் சுற்றுலா தலங்கள் என 400 பக்கங்களுக்கு, வாசகர்களுக்கு பெரு விருந்தே படைத்துள்ளனர்.
இது தவிர, தெய்வீக மணம் கமழும் சுவாமி படங்கள் மலரை அலங்கரித்துள்ளது. வழுவழு தாளும், புத்தக வடிவமைப்பும் படிக்கத் தூண்டுகிறது. ஒரு தீபாவளி மலர் எப்படி இருக்க வேண்டுமோ, அதற்கு சற்றும் குறையாமல் அனைத்து அம்சங்களுடன் வெளியிட்டிருப்பது சிறப்பு. கவுதம நீலாம்பரன் உட்பட பலரது படைப்புகள் சிந்தனையைத் தூண்டுபவை.
காஞ்சி சுவாமிகள் ஜெயேந்திரர் அளித்த பேட்டியில் முதன் முதலில் ரூ10 லட்சம் வசூலித்து அதை மகாபெரியவரிடம் தந்த போது, அவர் எடுத்த முடிவை மலரில்படித்து மகிழலாம். படித்து, பாதுகாத்து வைக்கக் கூடிய இதழ்களில் திரிசக்தி தீபாவளி மலரும் அடங்கும் என்பதில் சந்தேகமில்லை. தீபாவளி மலர் புத்தகத்துடன் 2011ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் இலவசமாக அளித்து, புதுமை செய்துள்ளனர். அதனால் தீபாவளி மலர் வாங்கும் போது காலண்டர் இருக்கிறதா என்ற கவனமும் தேவை.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!