விலைரூ.120
புத்தகங்கள்
பாபாஜி சித்தர் ஆன்மிகம்
விலைரூ.120
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: ஸ்ரீராஜாம்பாள் பப்ளிகேஷன் (பி) லிட்
பகுதி: பொது
Rating
முழுக்க முழுக்க ஆன்மிக விஷயங்களை உள்ளடக்கிய இந்த வருட தீபாவளி மலரை, வண்ணப் படங்களுடன் கண்களுக்கு விருந்தாக தயாரித்திருக்கின்றனர். மகாத்மா காந்தி நூல் நிலைய அமைப்பாளர் வி.மகாலிங்கத்தை நேர்காணல் கண்டு எழுதியுள்ள வி.ராமசுப்புவின் பேட்டிக் கட்டுரையும், பழனிபாரதியின் கவிதையும் வாசித்து யோசிக்க வேண்டிய வகையைச் சேர்ந்தவை. வெற்றிச் செல்வியின் சிருங்கேரி ஸ்ரீ வித்யா சங்கரர் கோவிலின் விசேஷ ராசித் தூண்கள் என்ற கட்டுரையில், தூண்களின் சிறப்பம்சங்கள் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. யோகி ராம்சுரத்குமார் பற்றி அருட்கவிஞர் பெருமாள் ராஜா அருமையான ஒரு கட்டுரை வழங்கியிருக்கிறார். ஆன்மிகம் சார்ந்த தகவல்களின் தொகுப்பாக உள்ளது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!